வவுனியா அம்மா பகவான் வீதிக்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் நீண்டகாலமாக மின் விளக்குகள் பொருத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சிறிரெலோ இளைஞர் அணி தலைவரின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் நகரசபை ஊடாக இவ்வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வீதி மின்விளக்குகள் பொருத்தும் இடத்திற்கு வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், சிறிரெலோ இளைஞர் அணியின் தலைவர் மற்றும் இளைஞர் அணியினரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like