வட்டுவாகல் பாலத்திற்கு அருகே உருவாகிறது தேசிய விளையாட்டு மைதானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையில் தேசிய விளையாட்டு மைதானமொன்றை அமைக்கும் முதற்கட்ட பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

32 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 780 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இவ்விளையாட்டு மைதானத்திற்கான காணி அளவிடும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகருக்கு அண்மையில் தேசிய விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்கவேண்டியதன் அவசியத்தை, வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவரான மறைந்த அன்ரனி ஜெகநாதன் வலயுறுத்தி வந்திருந்தார்.

இந்நிலையில், அன்ரனி ஜெகநாதனின் நினைவாக இவ் விளையாட்டு மைதானத்திற்கு அவருடைய பெயரை சூட்டுவதாக வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like