காதலிக்க மறுத்த இளம் பெண் : இளைஞர் செய்த விபரீத செயல்

இந்தியாவில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக ஆசிட்டை வாயில் ஊற்றிய இளைஞரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் புது டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ரவிக்குமார் அந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதை ஏற்க இளம் பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிகுமார் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அந்த பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார்.

இதில் வலியான துடித்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த செயலில் ஈடுப்பட்ட ரவிகுமாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

You might also like