homepage side 2

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும் மௌத் வாஷ்! இப்படிப் பாவியுங்கள்

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும் மௌத் வாஷ்! இப்படிப் பாவியுங்கள்

தலைமுடி உதிர்வதற்கு பொடுகுத் தொல்லையும் ஒரு காரணமாக அமைகின்றது.

பொடுகைப் போக்க எத்தனையோ இயற்கை வழிகளை நாம் இதுவரையிலும் பயன்படுத்தி உள்ளோம். அதில் நம் வீட்டில் இருக்கும் மௌத் வாஷ் கொண்டும் பொடுகை எளிதில் போக்கலாம்.

மௌத் வாஷில் இருக்கும் ஆல்கஹால் ஸ்கால்ப்பில் உள்ள ஈஸ்ட் தொற்றுக்களை உடைத்தெறிந்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

தேவையானவை
  • மௌத் வாஷ் – 1/2 கப்
  • பேபி ஆயில் – 1/2 கப்
  • ஒரு ஸ்ப்ரே பாட்டில்
செய்முறை

பாதி கப் மௌத் வாஷை எடுத்துக் கொண்டு, அதற்கு சம அளவில் பேபி ஆயிலையும் எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.

தலைமுடியை ஷாம்பு போட்டு அலசிக் கொள்ள வேண்டும். பின் கண்டிஷனரை தலைமுடியின் முனைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள கலவையை ஸ்கால்ப்பில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும்.

அப்படி ஸ்ப்ரே செய்யும் போது, முடியின் முனைகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் முடி வெடிப்புக்கள் ஏற்படும்.

பிறகு ஸ்கால்ப்பை 2-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்களின் படலம் உடைத்தெறியப்படும். பின் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து குளிர்ந்த நீரில் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

முக்கிய குறிப்பு
  • மௌத் வாஷை ஷாம்புவுடன் சேர்த்து கலந்தும், தலைமுடிக்கு பயன்படுத்தலாம். ஆனால் அளவாகத் தான் மௌத் வாஷைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தலைமுடி பாதிக்கப்படும்.
  • ஸ்கால்ப்பானது சென்சிடிவ் சருமம் அல்லது வறட்சியான சருமமாக இருந்தால், இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் இது நிலைமையை மோசமாக்கும்.
  • மௌத் வாஷை வாங்கும் போது, அதில் ப்ளேவர்கள் ஏதும் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
  • மௌத் வாஷை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தும் முன், சிறு இடத்தில் அதனை சோதித்துப் பார்த்து பின்பே பயன்படுத்த வேண்டும்.

 

You might also like