ஒரே தோள்பட்டையில் ஹேண்ட்பேக் மாட்டுபவரா? இந்த ஆபத்து உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது…

ஒரே தோள்பட்டையில் ஹேண்ட்பேக் மாட்டுபவரா? இந்த ஆபத்து உங்களை நெருங்கி கொண்டிருக்கிறது…

பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆண்களை போலவே பெண்களும் தற்போது காலையில் வேலைக்கு சென்றால் இரவு தான் வருகிறார்கள். அப்படி தினமும் இவர்கள் பயணித்தின் போது கைப்பைகளை உபயோகின்றனர்.

ஆனால் இந்த கைப்பைகளை ஒரு பக்கத்தில் மட்டும் தொடர்ந்து மாட்டிக்கொண்டு வந்தால் அதனால் பல பாதிப்புகள் வரும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் பாருங்கள்..

இவ்வளவு கனத்தையும் வருடக் கணக்கில் வலதுபக்கமே மாட்டிக்கொண்டிருந்தால், அந்தப் பக்கத்து தோள்பட்டையில் இருக்கிற தசையும் சில நரம்புகளும் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், அந்தப் பகுதிகளுக்கு ரத்தவோட்டம் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

வலதுபக்கம் தோள்பட்டை ரொம்ப வலிக்குது, அந்தக் கையில் இருக்கிற விரல்களெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சியே இல்லாத மாதிரி வெலவெலத்துப் போயிடுது. கழுத்து வலிக்குது, இடுப்பு வலிக்குது, தலைவலிகூட அடிக்கடி வருது.’ – இத்தனை புகார்ப் பட்டியலையும் நீங்கள் அடிக்கடி யாரிடமாவது சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா?

இவற்றுக்கெல்லாம் காரணம் உங்களுடைய ஹேண்ட்பேக் ஆகவும் இருக்கலாம் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா?”

ஹேண்ட்பேக்

வருடக் கணக்காக ஒரு பக்கம் மட்டுமே ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டிருக்கிற பெண்களுக்கு, அவர்களுடைய நடையே ஒரு பக்கம் சாய்ந்ததுபோல இருக்கும்.

இருபக்கமும் சமமாக இருக்கிற தோள்பட்டையில், ஒரு பக்கம் மட்டும் தொடர்ந்து கனம் அழுத்தும்போது, அதைச் சமாளிக்க உடம்பானது தன்னையறியாமல் அதனுடைய எதிர்ப்பக்கத்தில் சாய ஆரம்பிக்கும். நாளடைவில் இப்படிச் சாய்வதே ஒரு பழக்கமாகிவிட்டிருக்கும். இதைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே கண்களுக்கு புலப்படும். இது முதல் பிரச்னை.

காலேஜ் போகும் கேர்ள்ஸோ அல்லது வேலைக்குப் போகும் பெண்களோ அவர்களுடைய ஹேண்ட் பேக்கில் ஒரு லன்ச் பாக்ஸ், ஒரு வாட்டர் பாட்டில், ஒன்று அல்லது இரண்டு செல்போன், ஒரு பர்ஸ், ஒரு குடை என இத்தனையையும் வைத்திருப்பார்கள், இவ்வளவு கனத்தையும் வருடக் கணக்கில் வலதுபக்கமே மாட்டிக்கொண்டிருந்தால், அந்தப் பக்கத்து தோள்பட்டையில் இருக்கிற தசையும் சில நரம்புகளும் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், அந்தப் பகுதிக்கு ரத்தவோட்டம் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

ரத்தவோட்டத்துக்குத் தடை ஏற்பட்டால், அந்தக் கையின் விரல்களில் உணர்வு மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பிக்கும். இதையும் நீங்கள் கண்டுகொள்ளாமலே இருந்தீர்கள் என்றால், எதிர்காலத்தில் தோள்பட்டை இணைப்புகள் தேய ஆரம்பிக்கும். இதன் தொடர்ச்சியாகக் கழுத்து வலியும் தலைவலியும் வரும். இது இரண்டாவது பிரச்னை.

விரல்கள் மரத்துப்போதல்

மூன்றாவது பிரச்னை, வலதுபக்கம் மட்டும் தொடர்ந்து கனம் அழுத்திக்கொண்டிருக்கும்போது, உங்கள் உடம்பு தன்னையறியாமல் எதிர்ப்பக்கம் சாயும் என்று சொன்னேன் இல்லையா? இது வருடக்கணக்காகத் தொடரும்பட்சத்தில் இடது காலின் முட்டியின் தேய்மானம், வலது காலைவிட அதிகமாக இருக்கும். தவிர, உடல் தன் வெயிட்டை ஒரு பக்கமே சாய்ப்பதால் இடுப்பு வலியும் வரும்.

ஒரே பக்கம் மட்டும் ஹேண்ட் பேக்கை மாட்டாதீர்கள். 10 நிமிடம் வலதுபக்கம் என்றால், அடுத்த 10 நிமிடம் இடதுபக்கத் தோள்பட்டையில் மாட்டுங்கள். லன்ச் பேக்கை தனியாக எடுத்துச் செல்லுங்கள். அதை, ஹேண்ட் பேக் மாட்டுகிற பக்கத்தின் எதிர்பக்கத்தில் தூக்கிச் செல்லுங்கள். எடை இரண்டு கைகளிலும் சமமாக இருந்தாலே இந்தப் பிரச்னை வராது. அல்லது முதுகுப்பக்கமாக, இரண்டு தோள்பட்டைகளிலும் மாட்டுகிற பைகளுக்கு மாறிவிடுங்கள்.

பயிற்சி

கழுத்தை இட, வலமாகத் திருப்புகிற பயிற்சி, கைகளைக் கீழே, மேலே உயர்த்தி இறக்குகிற பயிற்சிகளைத் தினமும் 5 அல்லது 10 நிமிடங்கள் செய்து வாருங்கள். அழுத்தப்பட்ட தசைகள், நரம்புகளுக்கு ரத்தம் பாய்ந்து படிப்படியாகப் பிரச்னை சரியாகும்.”

 

You might also like