6.8 மில்லியன் பயனர்களின் படங்கள் திருட்டு: நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி?

6.8 மில்லியன் பயனர்களின் படங்கள் திருட்டு: நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி?

அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களே.

இவ்வாறே அண்மையில் பேஸ்புக் பயனர்கள் 6.8 மில்லியன் பேரின் புகைப்படங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

பேஸ்புக்கில் பயனர்கள் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன்கள் ஊடாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பயனர்களும் தமது படங்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதுடன் எந்த அப்பிளிக்கேஷன் ஊடாக படங்கள் திருடப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதனை அறிந்துகொள்ள https://www.facebook.com/help/200632800873098?ref=photonotice எனும் இணைப்பிற்கு செல்லவும்.

You might also like