வவுனியாவில் வகுப்பிலிருந்த மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்

வவுனியாவில் வகுப்பிலிருந்த மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்

வவுனியாவில் முதன்முறையாக இணையத் தகவல் திருடுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள  Diya Professional Training Centre கல்வி நிறுவனத்தில் இன்று (22.12.2018)  காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் தற்காலத்தில் இளம் சமுதாயத்தினர் எதிர்நோக்கும் கணிணி, கைத்தொலைபேசி ரீதியான பாரிய பிரச்சினைகளில் தகவல் களவாடப்படல் (Hacking) போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இக் கருத்தரங்கில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதன் போது விரிவுரையாளர் பயிலுனர்களுக்கு பயிற்சியினை வழங்கும் நோக்கில் அவர்களது அனுமதி பெறப்பட்டு அவர்களின் கையடக்கதொலைபேசியினை HACK செய்து கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியழித்தார்.

பயிலுனர்களுக்கு எமது தொலைபேசி, கணணிகளை எவ்வாறு HACK செய்கின்றனர் , அவற்றிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை விரிவுரையாளர் விளக்கமளித்தார்.

You might also like