தூக்கில் தொங்கிய போது குழந்தையைப் பெற்ற கர்ப்பிணி: மனதை உருக்கும் சம்பவம்

தூக்கில் தொங்கிய போது குழந்தையைப் பெற்ற கர்ப்பிணி: மனதை உருக்கும் சம்பவம்

தூக்கில் தொங்கிய நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் – ஜபல்பூர் அருகில் உள்ள கட்னி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் மனைவி லட்சுமி தாகூர் (36) இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் 9 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த லட்சுமி தாகூருக்கும் கணவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரை கணவன்-மனைவி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தனர்.

மேலும் கணவர் தூங்கச் சென்றதற்கு பின் தகராறு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த லட்சுமி தாகூர் திடீரென வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

காலையில் எழுந்த கணவர் மனைவியை காணாமல் தேடிய போது லட்சுமி வீட்டின் அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் மனைவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுபற்றி உடனே பொலிசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

அதன் பின்னர் அருகில் சென்று பார்த்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமி தூக்கில் தொங்கும்போது பிரசவம் ஏற்பட்டது தெரிய வந்ததுள்ளது.

மேலும் பிறந்த குழந்தை தாயின் சேலையில் சிக்கி தொங்கியபடி மயக்கத்தில் இருந்துள்ளது.

உடனே பெண் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் கொடுத்த நிலையில் பெண் மருத்துவர்கள் வந்து குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து சுத்தம் செய்து குழந்தைக்கு உயிரூட்டினார்.

இதனைத் தொடர்ந்து இதில் குழந்தை பிழைத்துக் கொண்டது.

பின்னர் தாயின் சடலத்தை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கும் பச்சிளங்குழந்தை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்;

தூக்கில் தொங்கி தற்கொலை செய்த போது பிரசவம் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்றும் இது கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.

You might also like