சிறுத்தை புலியிடம் சிக்கிய 3 வயது குழந்தை: தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய தாய்

மும்பையில் மூன்று வயது குழந்தையை காட்டுக்குள் இழுத்து சென்ற சிறுத்தை புலியிடம் இருந்து தைரியமுடன் அக்குழந்தையின் தாய் மீட்டுள்ளார்

மும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே ஆரே காலனியில் பிரமீளா ரின்ஜட் (23). இவருக்கு 3 வயதில் பிரணாய் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், பிரமீளா கடந்த திங்கட்கிழமை இரவில் வன பகுதிக்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சிறுவன் பிரணாயும் சென்றுள்ளான். இதனை பிரமீளா அறியவில்லை.

இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த சிறுத்தை புலி ஒன்று சிறுவனை தாக்கி பிடித்துள்ளது. இதனால் சிறுவன் அலறியுள்ளான். இந்த சத்தத்தினை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரமீள, பின்னர் தைரியமுடன் பாய்ந்து சென்று அதனை விரட்டியுள்ளார்.

அதன்பின் சிறுத்தை புலி புதருக்குள் சென்று மறைந்து விட்டது. பிரமீளா சத்தம் போட்டதை கேட்டு உள்ளூர்வாசிகள் உடனடியாக அங்கு சென்றுள்ளனர். அவர்கள் உதவியுடன் பிரணாய் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். அங்கு சிறுவனுக்கு 2 தையல்கள் போடப்பட்டன. அதன்பின் சிறுவன் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

You might also like