பெற்ற குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்ற கொடூர தாய்! அதிர வைக்கும் சம்பவம்

பெற்ற குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்ற கொடூர தாய்! அதிர வைக்கும் சம்பவம்

சென்னையில் 3 வயது மகனுக்கு ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின் 3 வயது மகன் ருத்ரா. இவர்கள், குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தனர்.

சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் தினேஷ் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய தினேஷ், நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் அவரது மனைவி ரக்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மகன் ருத்ரா முகம் வெந்த நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

முதற்கட்ட விசாரணையில், ரக்சிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

 

You might also like