உயிராபத்துடன் போராடிய இளைஞர்கள்! முல்லைத்தீவில் நடந்த துணிகர செயற்பாடு

உயிராபத்துடன் போராடிய இளைஞர்கள்! முல்லைத்தீவில் நடந்த துணிகர செயற்பாடு

முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையிலும், மீனவர்கள் இன்று காலை ஆழ்கடலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு 15 படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடித்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இந்நிலையில் ஒரு தொகுதி மீனவர்கள், தமது உயிரை துச்சமென மதிபத்து மீன்பிடிக்காக ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர்.

பொதுமக்கள் தமது உணவுத் தேவைக்காக மீன்களை கொள்வனவு செய்வதில் பெரும் சீரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்காரணமாக இன்று அதிகாலை கள்ளப்பாடு வடக்கு துறைமுகத்தில் இருந்து 15 படகுகள், மீன்பிடித் தொழிலுக்காக ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like