கண்டிப்பாக Google-ல் தேடலில் இதை மட்டும் தேடி விடாதீர்கள்..!

கண்டிப்பாக Google-ல் தேடலில் இதை மட்டும் தேடி விடாதீர்கள்..!

பொதுவாக நமக்கு தெரியாததை தெரிந்து கொள்ள Google தேடுதலின் உதவியை நாடுகிறோம்,ஆனால் பல நேரங்களில் google தேடல் உங்களுக்கு பாதகமாக அமைந்து விட நிறைய வாய்ப்பு உள்ளது.அப்படியான விஷயங்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

YOUR SYMPTOM

உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும்,குறைபாடுகளுக்கும் google தேடலில் சென்று தீர்வுகளை தெரிந்துக் கொள்ளவது,செய்யக்கூடாத ஒன்று.. இணையத்தில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் உண்மையான மருத்துவரின் ஆலோசனைப்படி பதிவு செய்யப்பட்டது அல்ல,உடலில் ஏற்படும் பிரச்சனைகளை கூகிளில் தேடும் போது உங்களை பயமுறுத்தும் விதமாகவே பதில்கள் வரக்கூடும்.

இதனால் உங்கள் உடலில் ஏற்படும் குறைபாடுகளை அருகில் உள்ள மருத்துவரை நேரில் கண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

ANYTHING CRIMINAL

இம்மாதிரி தேடல்கள் எப்போதுமே ஆபத்தானவை..ஒரு வேளை நீங்கள் google தேடலில் வெடி குண்டை எப்படி தயாரிக்க வேண்டும் என்று பதிவு செய்து தேடிப்பார்ப்பது,சட்ட விரோதமான அமைப்புகளை தேடுவது போன்ற செயல்களை செய்யும் போது அகில உலக சிறப்பு காவல் பிரிவினர் உங்களை கண்காணித்துக் கொண்டு இருப்பார்.மேலும் உங்கள் கணினியின் IP address மூலம் உங்களது தகவலையும் பெறுவார்கள்.

CANCER

Google தேடலில் சாதாரண தலை வலி போன்ற பிரச்சனைகளை பற்றி தேடும் பொழுது உங்களுக்கு இருக்கும் குறைபாடை ஏதாவது ஒரு புற்றுநோயுடன் தொடர்பு வைத்து உங்களுக்கு முடிவுகள் கொடுக்கும்.இம்மாதிரியான விஷயங்கள் நமக்கு அச்சத்தை அதிகம் தரும்.

SKIN CONDITIONS

உடலில் திடிரென்று ஏற்படும் கட்டிகளையும்,புண்கள் போன்றவற்றை கூகிளில் தேடும் பொழுது முடிவுகள் பாதகமாக அமையலாம்..தோள் புற்றுநோய் வரைக்கும் சென்று உங்களை பயமுறுத்தினாலும் ஆச்சிர்யம் இல்லை.

TRYPOPHOBIA

இந்த வார்த்தையை மட்டும் google தேடலில் தேடி வீடாதீர்கள்,அப்படி தேடி விட்டால் உங்களுக்கு google கொடுக்கும் புகைப்படங்களை பார்க்க தனி சக்தியே வேண்டும்.அவ்ளோ வினோதமான புகைப்படங்களை google நமக்கு காட்டும்.எனவே இதை தேடுவதை தவிருங்கள்

GIVING BIRTH

இத்தேடலை முழுமையாக செய்யக்கூடாதவர்கள் பெண்கள் தான்,ஏன் என்றால் குழந்தை பிறக்கும் பொழுது ஒரு பெண் எந்த மாதிரி வலிகளை அனுபவிக்கிறாள் என்பவை அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டு இருக்கும், இது பெண்களை மன குழப்பத்திற்கு,மேலும் அச்சம் அடையவும் செய்யும்.

DEATH CLOCK

Google தேடலில் death clock என்று தேடி விடாதீர்கள்,இது தேவையற்ற இணைய தளங்களுக்கு சென்று உங்களின் வாழ்நாளில் மீதி எவ்ளோ நாட்கள் நீங்கள் வாழ போகிறீர்கள் என்பதை சில கேள்விகளை உங்களிடம் கேட்டு முடிவுகளை கூறுவார்கள்..இவ்வாறு செய்வதின் மூலம் நீங்கள் தேவையற்ற மணக் குழப்பத்திற்கு ஆளாகலாம்.

BED BUG INFESTATIONS

மேத்தைகளில் தூங்குபவரா நீங்கள், அப்படி என்றால் BED BUG INFESTATIONS என்ற இவ்வார்த்தையை கூகுளில் தேடாதீர்கள்,ஏன் என்றால் வித்தியாசமான பூச்சிகள் மெத்தைகளில் இருப்பது போலவும்,நீங்கள் மெத்தைகளில் படுக்கும் போது உங்கள் மேல் பூச்சிகள் ஊருவது போலவும் உணர்வை உண்டாக்கும்.

You might also like