பன்னங்கண்டி பிரதேச மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு  மற்றும்  யொனிக் குடியிருப்பு     பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால் அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை  வழங்குங்கள்  எனக் கோரி  நேற்று       (புதன்கிழமை) கவனஈர்ப்பு போராட்டத்தை   ஆரம்பித்திருந்தனர்

இப்போராட்டம்  இன்று வியாழக்கிழமை  இரண்டாவது நாளாகவும்  தொடர்கின்றது

அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரும் என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like