கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்ற இளைஞன் பலி!

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்ற இளைஞன் பலி!

கொழும்பிலுள்ள களியாட்ட விடுதிக்கு சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொம்பனித் தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் மின்சார லிப்ட் உடைந்து விழுந்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த லிப்ட்டில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இந்த கட்டடத்தின் 9வது மாடியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென மின்சார லிப்ட் விபத்துக்குள்ளாகி கீழே உடைந்து விழுந்துள்ளது.

சம்பவத்தில் பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like