துவிச்சக்கரவண்டியுடன் மோதிய கார்! வைத்தியசாலையில் சிறுவன்

துவிச்சக்கரவண்டியுடன் மோதிய கார்! வைத்தியசாலையில் சிறுவன்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் காரொன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரொட்டவெவ பகுதியை சேர்ந்த எச்.எம்.ஹஸீம் (12 வயது) என்ற சிறுவனே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்தில் காயமடைந்த சிறுவன் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like