உழவு இயந்திரத்திற்குள் சிக்கி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தந்தை..!

புத்தளம் நாத்தாண்டி பிரதேசத்தில் வயலில் உளவு வேலை செய்துகொண்டிருந்தவர் உழவு இயந்திரத்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் சடலம் இன்று காலை உழவு இயந்திரத்திற்கு அடியில் சிக்குண்ட நிலையில், வயலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என்றும், இவருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று மாலை வயலுக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் பொலிஸாருக்கு குடும்பத்தினர் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலை உழுந்து கொண்டிருந்த போது உழவு இயந்திரம் மரம் ஒன்றில் மோதி முன்னால் வேகமாக இழுத்து சென்றுள்ள நிலையில் உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கி இவர் உயிரிழந்திருக்க கூடும் என மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like