தொலைபேசிகளை கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

நீர்கொழும்பில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் 14 செல்போன்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை மற்றும் திக்குவளை பிரதேசங்களை சேர்ந்த 23, 30 மற்றும் 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 14 ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் சட்டத்தை அமுலாக்கும் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட செல்போன்களின் பெறுமதி 7 லட்சம் ரூபா எனவும் அவற்றில், 9 செல்போன்களை தாம் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like