பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது
கல்கிஸ்ஸ பகுதியில் பாலியல் தொழிலை நடத்தி வந்த முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்களை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தம்புள்ளை, பிலியந்தலாவ மற்றும், வெலப்பன பகுதிகளைச் சேர்ந்த 38, 55 மற்றம் 24 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.