வாகன விபத்தில் குழந்தையை விட்டு தாய் பிரிந்த சோகம்!

தெற்கு அதிவேகப் பாதையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்று கார் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது குறித்த காரில் தாய், தந்தை, குழந்தை இருந்துள்ளனர்.

விபத்தினை தொடர்ந்து படுகாயத்திற்குள்ளான பெண்,சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார்.

காயமடைந்த குழந்தையும் ,தந்தையும் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொடவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன், கலனிகமுவ பொலிஸார்மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like