முறிகண்டிப்பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!

முறிகண்டிப்பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முறிகண்டிப்பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஸ்கந்தபுரம் கிளிநொச்சியைசசேர்ந்த கால்நடைப்பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்த சமயம் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரத்தில் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

இதைவிட, பலமாடுகள் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like