வவுனியாவில் இளைஞர்களுக்கிடையில் கடும் மோதல்! அதிர வைத்த காணொளி இதோ..

வவுனியாவில் இளைஞர்களுக்கிடையில் கடும் மோதல்! அதிர வைத்த காணொளி இதோ..

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் வீதியோரங்களில் சுற்றித் திரியும் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

யாழ் மண்ணில் தற்காலத்தில் புரையோடியுள்ள கலாசாரம் வவுனியாவிலும் பரவி விட்டதா என்ற கேள்வியே எல்லோர் மனதிலும் எழுகின்றது.ஆங்காங்கே வவுனியாவின் பல இடங்களில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் இடம்பெறினும் அதனை எவ்விதத்திலும் கண்டுகொள்ளாத வகையிலேயே சமூக அக்கறையற்றவர்களாகவே அனைவரும் நடந்து கொள்கின்றனர்.

இதற்குச் சான்றாக, நேற்றைய தினம் வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் இளைஞர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதுடன் மட்டுமன்றி மோதலில் முடிவடைந்துள்ளது. இம் மோதலினை தவிர்ப்பதற்கு சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்த எவருமே முன்வரவில்லை என்பதே இங்கு கவலைக்குரிய விடயமாகும். எமது சமூகம் எவ்வாறான நிலைமை நோக்கிச் செல்கின்றது என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னோட்டத்தினை அனைவருமே காணக் கூடியதாகவிருந்தது. ஒவ்வொரு தனிமனிதனும் சமூகநலனில் சிறிதளவேனும் அக்கறை கொண்டால் மட்டுமே இவ்வாறான நிஜ மோதல்களினை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

You might also like