முல்லைத்தீவில் கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்திய படகில் முக்கிய ஆவணம் மீட்பு!

முல்லைத்தீவில் கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்திய படகில் முக்கிய ஆவணம் மீட்பு!

முல்லைத்தீவு – வலைஞர்மடம் கடற்பகுதியல் கவிழ்ந்த நிலையில் மீன்பிடிப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10525/Gh3/MC இலக்கமுடைய இந்த படகு இந்தியா ஆந்திரா மானில கடற்தொழில் பதிவை கொண்டுள்ளதாக அந்த படகில் இருந்து மீட்க்கப்பட்ட ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த படகு நேற்று கரை ஒதுங்கிய நிலையில் படகை கடலில் இருந்து மீட்கும் முயற்சியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

எனினும், நேற்று கடற்கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று தானாகவே மீன்பிடிப்படகு கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த படகில் இருந்து மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை நீதிமன்றில் சமர்பிக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like