வவுனியாவில் புதுவருடக் கொண்டாட்டம் என்ற போர்வையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்!

வவுனியாவில் புதுவருடக் கொண்டாட்டம் என்ற போர்வையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்!

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே இன்று (01.01.2019) காலை 9.30 மணி தொடக்கம் தற்போது வரை அவ்விடத்தில் இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதியில் ஒன்று கூடியுள்ள இளைஞர்கள் வெடிகளை கொழுத்தி அயலிலுள்ள வீடுகளுக்கு வீசுவதுடன் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்படும் வீதியுடாக வாகனங்கள் பயணிப்பதற்கு இடையூராகவும் செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள்ளும் பட்டாசுகளை எறிந்து விளையாடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் தமிழ் மொழி மூல பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் இது வரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.

You might also like