துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி: காரணம் என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Gansingen நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 59 மற்றும் 50 வயதான தம்பதி இருவர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் வெடி விபத்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.

பின்னர், வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது படுக்கை அறையில் தம்பதி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

மேலும், இருவரின் மீது துப்பாக்கி குண்டு காயம் இருந்துள்ளது. வீட்டில் தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், இருவரும் மற்ற நபரால் சுட்டுக்கொல்லப்படவில்லை எனவும், இது நிச்சயமாக தற்கொலையாக தான் இருக்கும் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

சடலங்களில் டி.என்.ஏ சோதனை செய்தபோது இருவரும் தம்பதி எனத் தெரியவந்தது.

மேலும், வீட்டில் இருந்த அறை ஒன்றில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில் இருந்துள்ளது. எனினும், இது எவ்வாறு வெடித்தது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like