பிள்ளையை பேருந்து நிலையத்தில் கைவிட்டுச் சென்ற தாய்
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தனியார் பேருந்து நிலையத்தில் ஆண் பிள்ளையை கைவிட்டு சென்ற பெண்ணொருவர் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் பிள்ளையை நேற்று (22) மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளை இரண்டு தினங்களாக கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையின் தாய் பிச்சை எடுப்பவர் எனவும் இதுவரை அவர் பிள்ளையை தேடி வரவில்லை எனவும் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையை பொலிஸார் தமது பொறுப்பில் வைத்துள்ளனர். கோட்டை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.