ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் கடற்படை தளபதி

கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானை பயன்படுத்தி இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக தற்போதைய கடற்படை தளபதி செயற்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று (23) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளுக்கு கடற்படை தளபதி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் விசாரணைகளை நடத்திய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய இரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்து அதனை அன்றை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்ததாக விஜேசிங்கவின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அறிக்கை ஆரம்ப நீதவான் விசாரணைகளில் சமர்பிக்கப்பட்டதாகவும் அதில் மாற்றங்களை செய்யப்பட்டிருந்ததாகவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளா்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பான விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்சி உத்தரவிட்டுள்ளார்.

You might also like