முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் வீட்டில் 370 கிலோ கஞ்சா மீட்பு

எம்பிலிபிடிய – பனாமுர பகுதி வீடொன்றின் பின்புறத்தில் இருந்த, பங்கரில் 370 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கஞ்சாவை கைப்பற்றிய கலால் திணைக்களத்தினர் சந்தேகநபரான அந்த வீட்டு உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், அவர் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் என, கலால் திணைக்களத்தின் விஷே சுற்றிவளைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You might also like