வவுனியா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை குழப்பும் சதியா? ஆசீர்வாத பெருவிழா(படங்கள்)

வவுனியாவில் 24, 25,26ஆகிய தினங்களில் நகரசபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசீர்வாதப் பெருவிழா நிகழ்வு அப்பகுதியில் தொடர் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக விசனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நகரசபை மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள குறித்த நிகழ்விற்கு பெரும் சத்தம் அப்பகுதியில் அதிர்வை எற்படுத்தியுள்ளது. தொடர் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் எமக்கு இரவு வேளையில் ஆறுதலாக இருக்க முடியவில்லை. இச்சத்தம் எமது காதுகளைத் துழைபோட்டுச் செல்வதாகவும் நொந்துபோயிருக்கும் எமக்கு இது பெரும் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (23.03.2017) பிற்பகல் முதல்,இரவு வரையானவேளையில் சோதனை மேற்கொள்வதாக தெரிவித்து பெரும் சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. வவுனியா நகரில் அதி நவீன் கருவிகள் உதவியுடன் இதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு பெற்று இதனை நிறுத்த சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும்