வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்து மீது தாக்குதல் : ஜவர் மருத்துவமனையில்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மீது நேற்று (23.03.2017) இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஜவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை 4.45மணியளவில் வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து இரவு 10.30மணியளவில் அனுராதபுரத்தினை அண்மித்தது. இதன் போது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்துக்கும் இ.போ.ச பேரூந்துக்கும் இடையே போட்டித்தன்மை ஏற்ப்பட்டுள்ளது. அனுராதபுரம் உலுக்குளம் பகுதியில் வைத்து இ.போ.ச பேரூந்தினை தனியார் பேரூந்து முந்திச் சென்று 2நிமிடங்களில் இ.போ.ச பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் இ.போ.ச பேரூந்தின் சாரதி உட்பட ஜவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like