வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித்திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் 24கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ். செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இன்று (24.03.2017) காலை தமது திணைக்களத்திற்குக்கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சென்றபோது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து வெளிமாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 24கிலோ கேரளா கஞ்சாவினை புளியங்குளம் பகுதியிலிருந்து நெடுங்கெணி செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் பயணப்பொதியுடன் நின்ற சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மதுவரி பரிசோதகர் த. நளிதரன் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த 24கிலோ கேரளா கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதாகவும் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நிதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

You might also like