மக்களுக்காக வீதியில் இறங்கிய வவுனியா பொலிஸார்

வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று (24.03.2017) காலை 9.00மணியளவில் டெங்கு விழிப்புணர்வு பேரணியோன்று இடம்பெற்றது.

இப்பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு சந்தியூடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணையினை சென்றடைந்து பின்னர் மீண்டு அதே வழியால் மணிக்கூட்டு சந்தியினை வந்தடைந்து பஸார் வீதியுடாக ஹேரவப்பத்தானை வீதியினை சென்றடைந்து றோயல் விடுதியில் நிறைவடைந்தது

இப் பேரணியில் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸார், தொழிநூட்ப கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நீர் தேங்கும் இடங்களை இல்லாதொழித்தல் , நீர் வடிந்தோடும் வடிகால்த் தொகுதிகளை முறையாகப் பேணுதல், டெங்கு இறப்பளிக்கும் நோயாகும், அடுத்த இரை நீங்களாயிருக்கலாம்.தயது செய்து இருமுறை சிந்தியுங்கள் என பல்வேறு பதாதைகளை ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு நடைபவனியில் ஈடுபட்டனர்.

You might also like