வவுனியாவில் தனியாகச் சென்ற பெண்ணை வழிமறித்து தாக்கி பணம் கொள்ளை..!!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புதுக்குளம் பகுதியில் நேற்றிரவு (23-03) தனியாகச் சென்ற பெண்ணை வழிமறித்த இருவர் அவரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியில் வசித்துவரும் குறித்த பெண் மீன் வியாபாரம் செய்து வருகிறார் அவர் தனது வியாபாரப்பணத்தை சேகரித்து கொண்டு இரவு 8.30 மணியளவில் வீடுநேக்கி செல்கையிலேயே இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து முகத்திற்கு டொர்ச் லைற் வெளிச்சத்தை பாய்ச்சிய பின் தாக்கி கிழே தள்ளி அப்பெண்ணின் பணப்பையை அபகரித்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். பறிகொடுத்த பணப்பையில் 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் காசோலைகள் வங்கி கடனட்டைகள் இருந்ததாக தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தமிழில் முறைப்பாடு வழங்கும் 0766224949 இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு மேற்கொண்டதாக தெரிவித்த அவர் விபரங்களை கேட்டறிந்த பொலிசார் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கும் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

You might also like