கிளிநொச்சியில் 33ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 33 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது கடந்த மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like