காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் அடிப்படை வசதிகள் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டத்தினை பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறு வாழ முடியாது, தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரியுள்ளனர்.

இதேவேளை தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like