வவுனியாவில் காசநோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

வவுனியாவில் இன்று (24-03-2017) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி ஒன்று வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு. அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய செயற்த்திட்டத்தின் ஒழுங்குபடுத்தலில் ‘ ஒன்றுபடுவோம் காசநோயை இல்லாதொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது வவுனியா பொது வைத்தியசாலை காசநோய் பிரிவில் தாதியர் மற்றும் ஊழியர்களுக்கு விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதன் பின் காசநோய் விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

இப்பேரனியானது வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு குருமன்காட்டு சந்தியை வந்தடைந்து அங்கிருந்து வவுனியா மணிக்கூட்டு சந்தியை சென்றடைந்து மீண்டும் வவுனியா பொது வைத்தியசாலையை சென்றடைந்தது.

You might also like