மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த மாணவருக்கு பிணை!

பொரளையில் உள்ள மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த உயர்தர மாணவர்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மாணவரைபிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்தஉயர்தர மாணவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில்ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த மாணவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிகநீதவான் லால் ரனசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

You might also like