பூசணி கொடிக்கு 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிட்ட அதிகாரிகள்

பூசணி கொடிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட்ட சம்பவம் ஒன்று ரிதிகம பகுதியில் பதிவாகியுள்ளது.

பூசணிக்காய் கொடியில் நுளம்பு பரவுவதாக தெரிவித்து, ரிதிகம பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இவ்வாறு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கினிஹிரிய விகாரைக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றை, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரும் அவரது மனைவியும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரிதிகம பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்தின் வீடுகளை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் இந்த பூசணிக்காய் கொடியில் நீர் நிரம்பினால் டெங்கு தொற்ற கூடும்.

இதனால் தண்டப்பணம் அறவிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்று 50 ஆயிரம் தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும், மன்னிப்பு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவசியமான வாக்குறுதிகள் பெற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வருமாறு திகதி ஒன்றை வழங்கிய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ரம்படகல்ல நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர் 50ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாகியுள்ளார்.

You might also like