சாரதியை தாக்கி விட்டு முச்சக்கர வண்டியை கடத்தியவர்கள் கைது
முச்சக்கர வண்டியில் வாடகைக்கு பயணம் மேற்கொள்ளும் போர்வையில், பயணத்தின் இடைநடுவில் சாரதியை தாக்கி விட்டு முச்சக்கர வண்டியை கடத்திச் சென்ற பெண் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம – கல்னேவ வீதியில் கலாஓயா பலத்திற்கு அருகில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்டதாக அதன் சாரதி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட தம்புத்தேகம பொலிஸார் முச்சக்கர வண்டியுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
ஹபராதுவ மற்றும் கும்புறுப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த இருவரும் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.