பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலால் 700 பேர் பாதிப்பு

புத்தளத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் காய்ச்சலைக் கண்டறியும் பொருட்டு நோயாளர்களிடம் இருந்து பெறப்பட்ட குருதி மாதிரிகளை பொரளையில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிகிகப்பட்டவர்களில் 70 பேர் சிறுவர் பிரிவிலும், 160 பேர் வெளிநோயாளர் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like