வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று தற்போது குறைவடைந்து வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் 63 பேரும், வவுனியாவில் 18 பேரும், கிளிநொச்சியில் 3 பேரும், மன்னாரில் 6 பேரும், முல்லைத்தீவில் 5 பேருமாக 95 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 6 பேரும், வவுனியாவில் 2 பேரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவில் ஒருவர் வீதமும் ஆக 10 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

You might also like