13 கோடியே 20 இலட்சம் கோழிகள் வருடாந்தம் இறைச்சிக்காகக் கொலை

வருடாந்தம் 13 கோடியே 20 இலட்சம் கோழிகள் இறைச்சிக்காகக் கொலை செய்யப்படுவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வருடத்துக்கு 31 ஆயிரத்து 625 மெட்ரிக்தொன் எடையிலான மாட்டிறைச்சியும், ஒரு இலட்சத்து 65 ஆயிரம் மெட்ரிக் தொண் அளவிலான கோழியிறைச்சியும் பொது நுகர்வுக்காகத் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக வருடா வருடம் 50 ஆயிரம் ஆடுகளும், ஒரு இலட்சத்து 67 ஆயிரம் மாடுகளும், 13 கோடியே 20 இலட்சம் கோழிகளும் கொல்லப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கான பதிலை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு சபையில் ஆற்றல்படுத்தியது.

You might also like