இலங்கையில் ஆமைகளுக்கு சிகிச்சையளிக்கும் வெளிநாட்டு மாணவிகள்

கடல் ஆமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவிகள் இலங்கை வந்துள்ளனர்.

அம்பாலங்கொடை பட்டபெதிமுல்ல கடலோர பகுதியில் அமைந்துள்ள கடல் ஆமை காப்பகத்தில் உள்ள ஆமைகளுக்கு இந்த மாணவிகள் சிசிச்சையளித்து வருகின்றனர்.

காப்பகத்தில் உள்ள அங்கவீனமான கடல் ஆமைகளுக்கு இந்த வெளிநாட்டு மாணவிகள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த இந்த மாணவிகள் தமது விடுமுறை காலத்தில் இலங்கை வந்து இந்த பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவிகள் ஆமைகள் இருக்கும் இடங்களை சுத்தம் செய்தல், அவற்குக்கு உணவு வழங்குதல், சிகிச்சையளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like