குடும்ப தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

மத்துகம பொல்கஹாவத்தை தாபிலிகொடை – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று (23) குடும்ப தகராறு முற்றியதில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அகலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவனுக்கு மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியத்தில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து மத்துகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொல்கஹாவத்தை, தாபிலிகொடை, அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான மத்துமகே ரோணுகா மல்காந்தி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் சடலம் பிம்புற வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர், நாகொடை வைத்தியசாலையில் இன்று பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த கொலை சம்பவத்தை அடுத்து கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில், நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like