கள்ளத்தொடர்பு விவகாரம்! 3 குழந்தை, மனைவியை துடி துடிக்க கொன்ற கணவர்

கணவர் ஒருவர் தனது 3 குழந்தை மற்றும் மனைவியை கொடூரமாக கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா, Narnaul மாவட்டத்தில் உள்ள Shehbajpur கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி ராதே ஷியாமை பொலிசார் கைது செய்துள்ளனர்.

36 வயதான ராதே ஷியாம் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 33 வயதில் மஞ்சு என்ற மனைவியும், 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்களும், 3 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

மனைவி மற்றொருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகமடைந்த ராதே ஷியாம், மனைவியின் கண் முன்னே மூன்று குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

பின்னர், மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற ஷியாம், சுடுகாடு அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அங்கிருந்தவர்கள் ஷியாமை மீட்டுள்ளனர். பின்னர், தகவல் அளிக்க வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனைவி, குழந்தைகள் பிணமாக இருந்துள்ளனர்.

ஷியாமை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொன்றதற்கான காரணத்தை ஷியாம் கூறியுள்ளார்.

You might also like