பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது! ஏன் தெரியுமா?

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர்கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து ஒரு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து, பாகிஸ்தான் செல்லும் நோக்கில் அவர் இலங்கை வந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப் பொருளைபாகிஸ்தான் நாட்டவர் கொண்டு வந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like