மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளூநருக்கு அழைப்பாணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளூநரான பீ.சமரசிறியை எதிர்வரும் திங்கட்கிழமை சாட்சியமளிக்க பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி நடந்த காலத்தில் மத்திய வங்கியின் பிரதி ஆளூநராகப் பணியாற்றிய அவரை 27ஆம் திகதி சாட்சியமளிக்கப் பிரசன்னமாகுமாறு ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய அழைப்பாணை விடுத்திருக்கிறார்.

ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்த முதற்கட்டத்தில் சமரசிறியின் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷ பர்னாந்து பிரசன்னமாகயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like