யுத்தத்தின் பின்னர் மக்களிடையே நற்புறவை ஏற்ப்படுத்துவது எவ்வாறு: வவுனியாவில் கலந்துரையாடல்

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்ப்பாட்டில் ‘பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு’ எனும் செயற்றிட்டத்தினை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பதற்குறிய தேவையான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தினை செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்தல், அதன் நோக்கத்தையும் பெறுபேற்றையும் இனங்காணுதல், எதிர்கால செயல்கள் தொடர்பாக தொடர்பான கலந்துரையாடல் இன்று ( 25.03.2017)  காலை 8.30மணி முதல் வவுனியா சுவர்க்கா விடுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மூன்று தசாப்தமாக நடைபெற்ற இனரீதியான யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அதனால் ஊட ஏற்பட்ட பல சிக்கல்கள் இன்னும் தீர்க்க வேண்டியுள்ளது. யுத்தத்தின் காரணமாக வட கிழக்கில் வாழும் பல குடும்பங்கள் சிதறிப் போயுள்ளன. குடும்பத்தின் பிரதான உழைப்பாளர்கள் இழந்து போனதால் தற்போதுள்ள உறுப்பினர்களின் வாழ்க்கை நிலை குறித்து பல சிக்கல் ஏற்பட்டுள்ளன. காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் வாழ்வுத் தகவல்களை .உறுதிசெய்துகொள்வது பிரதாக பிரச்சனையாகும் அதுபோல தனிமைப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் பெண்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு ஆளாகும் இடம்பாடுகளும் உள்ளன. குறிப்பாக எமது நாட்டில் வாழும் பல்லின மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் அதிகமாக வளர்ந்த நம்பிக்கையீனம், சந்தேகம், அச்சம், மனவிரிசல் முழுமையாக நீங்கி விடவில்லை மேற்படி பல விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக  தீர்க்கமான செயல்முறைகள் கொண்ட  ‘பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு’ எனும் செயற்றிட்டத்தின் ஆரம்ப கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இக் கூட்டத்தில் சமயத்தலைவர்கள், கிராம தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், சமய ஆர்வலர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like