கூரிய ஆயுதத்தினால் தாக்கி நண்பர் கொலை

கூரிய ஆயுதத்தினால் தாக்கி நண்பரை கொலை செய்துள்ள நபர் ஒருவரை ஹொரண காவற்துறை கைது செய்துள்ளது.

ஹொரண – மீமன – பலான பாடசாலை அருகில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலை செய்த நபர் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் போதே  கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெற்ற இடத்தில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கொலை செய்துள்ளதுடன், அவரை ஹொரண காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

You might also like