சினிமா பாணியில் ஆணொருவரை கடத்திய இரு பெண்கள்! -இலங்கையில் சம்பவம்

நபர் ஒருவரை கடத்திய 2 யுவதிகள் உள்ளிட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களனி பிரதேசத்தில் குறித்த நபர் கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு யுவதிகள் மற்றும் மூன்று இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினால் இவ்வாறு கடத்தல் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுடையவர்கள் எனவும், களனி பெதியாகொடவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

You might also like