வவுனியா சின்னப்புதுக்குளம் தேவாலயத்தில் களைகட்டிய சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகள்

வவுனியா சின்னப்புதுக்குளம் தேவாலயத்தில் களைகட்டிய சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகள்

வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைந்துள்ள இயேசுவின் அற்புத சபை ஊழியரும், சபையினரும் இன்று (04.02.2019) காலை 8.00 மணிக்கு இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடினார்கள்.

தேசம் செழிப்படையவும் இன மத பேதமின்றி நாட்டு மக்கள் யாவரும் சமாதானமாக வாழவும் இறையாசி வேண்டி சபை சகோதரி தர்ஷாவினால் பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தங்கல்ல தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் சபை தலைமைப் போதகர் ஜேசுதாசனினால் கிறிஸ்தவக் கொடி ஏற்றப்பட்டது.

You might also like